Monday, October 21, 2013

நூன்மரபு

தொல்காப்பியத்த்தில் ‘என்ப என்னும் சொல் 19 இடங்களில் பயின்றுவந்துள்ளது. அவற்றுள் தொல்காப்பியம் நூன்மரபு என்னும் இயலில் மட்டும் 6 இடங்களில் பயின்றுவந்துள்ளது. எனவே இந்த இயலின் தலைப்பில் உள்ள நூல் என்னும் சொல் நூலோரைக் குறிக்கும் ஆகுபெயர் என்பது தெளிவு.

என்மனார் என்னும் சொல் 74 இடங்களில் பயின்றுவந்துள்ளது. புலவர் என்னும் சொல் 14 இடங்களில் உள்ளது. இவற்றை எண்ணிப் பார்க்கையில் தொல்காப்பியர் முன்னோர் மரபினைப் பெரிதும் பின்பற்றியமை புலனாகிறது. 

No comments:

Post a Comment